பிரான்சில் மர்மமிருகம் உலா வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Updated in 2021-Oct-18 08:07 AM

உலா வரும் மர்ம மிருகம்...பிரான்சில் மர்ம மிருகம் ஒன்று உலா வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் Frévent மற்றும் Auxi-le-Château பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம மிருகம் ஒன்று தென்பட்டுள்ளது. ஆனால் அந்த மிருகமானது தற்போது வரையில் எவராலும் அடையாளம் காணப்படவில்லை.

மேலும் உள்ளூர் வேட்டைக்காரர்கள் உதவியோடு அந்த மர்ம மிருகத்தை பிடிக்கும் பணியில் அவர்கள் இறங்கியுள்ளனர். அந்த மிருகத்தை தற்போது வரையில் யாரும் அடையாளம் காணவில்லை என்பதால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அந்த மிருகமானது இராட்சத உருவில் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸார் சந்தேகம் படும் ஏதெனும் மிருகத்தின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் அளிக்கும்படி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.