போர்ச்சுகலில் 5.2 டன் அளவு கொக்கைன் பறிமுதல்

Updated in 2021-Oct-19 02:51 AM

கொக்கைன் பறிமுதல்...போர்ச்சுகலில் இதுவரை இல்லாத அளவில் படகில் வைத்து 5.2 டன் அளவு கொக்கைனை பறிமுதல் செய்து உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் லிஸ்பனில் பாயும் டகுஸ்  ஆற்று பகுதியில் படகில் போதை பொருள் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் 183 சாக்கு மூட்டைகளில் இருந்த கொக்கைனை பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்டதாக ஸ்பெயினை சேர்ந்த 2 பேர், பெரு நாட்டை சேர்ந்த ஒருவர் என 3 பேரை கைது செய்தனர்.