மிக பெரும் அழிவை வேண்டுமென்றே உருவாக்கிய 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Updated in 2021-Oct-21 07:01 AM

24 பேருக்கு மரண தண்டனை...சிரியாவில் மிகபெரும் அழிவை வேண்டுமென்றே உருவாக்கிய 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதிதுறை தகவல் தெரிவித்துள்ளது.

சிரியாவில் குறித்த காட்டுத்தீயானது 3 மாகாணங்களுக்கு பரவியுள்ளது. இந்த காட்டுத்தீ சம்பவத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. இந்த காட்டுத்தீயால் சிரியாவில் 32 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் அழிந்துள்ளதாகவும் 370 வீடுகள் தீக்கிரையானதாகவும் மேலும் 3 பேர் தீயில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

சிரியாவில் இந்த காட்டுத்தீயானது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 24 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்று காட்டுத்தீயை வேண்டுமென்றே உருவாக்கிய 24 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் குறித்த அனைவருக்கும் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.