பிரான்சில் புயலால் 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மின் பாதிப்பு

Updated in 2021-Oct-21 07:20 AM

புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பிரான்சில் ஏற்பட்ட புயல் காரணமாக அங்கிருந்த பெரும்பாலான மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளன. இது குறித்து வெளியான தகவலானது, பிரான்சில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

மேலும் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக நார்மண்டி, வடக்கு பிரான்ஸ், கிழக்கு பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன' என்று தகவல் வெளியாகியுள்ளன.

சுமார் 3,000 ஊழியர்கள்பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலநிலை மற்றம் காரணமாக தான் இந்தளவிற்கு மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.