டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது

Updated in 2021-Oct-24 07:03 AM

டாஸில் வென்ற பாகிஸ்தான்...இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரும் போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திர அஸ்வின், ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அதே வேளை இளம் வீரரான வருண் சக்கரவர்த்திக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. அதே போல் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே போல் இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலிக்கு இடம் கிடைக்கவில்லை. இவரை தவிர பாகிஸ்தான் அணி அறிவித்திருந்த வீரர்கள் அனைவரும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி: ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

பாகிஸ்தான் அணி; பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃப்கர் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வசீம், ஷாதப் கான், ஹசன் அலி, ஹரிஸ் ரவூஃப், ஷாகின் அப்ரிடி.