ஆர்சினல்.எஃப்.சி-யின் பயிற்சி அகாடமியில் 4 வயது சிறுவன் சேர்ப்பு

Updated in 2021-Oct-24 07:22 AM

4 வயது சிறுவன் சேர்ப்பு...இங்கிலாந்தின் பிரபல கால்பந்து அணியான ஆர்சினல்.எஃப்.சி-யின் பயிற்சி அகாடமியில் 4 வயது சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளான்.

அந்த அணியின் அகாடமியில் மிக குறைந்த வயதுள்ள உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள Zayn Ali Salman என்னும் அந்த சிறுவன், பயிற்சி போட்டியில் ஈடுபடுவது, பல கோல்களை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உள்ளிட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே, ஆர்சினல்.எஃப்.சி அணியுடன் ஒப்பந்தம் கையெழுத்திடும் அளவுக்கு Zayn-க்கு வயதாகவிலை என அவனது தந்தை Ali Salman தெரிவித்துள்ளார்.