ஹூனான் மாகாணத்தில் பெண்ணின் காதுக்குள் உயிருடன் இருந்த சிலந்தி

Updated in 2021-Oct-25 06:42 AM

பெண்ணின் காதுக்குள் உயிரோடு சிலந்தி...தெற்கு சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள சூஜோவைச் சேர்ந்த யி என்ற பெண்ணின் காதுக்குள் உயிரோடு சிலந்தி ஒன்று இருந்ததைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தெற்கு சீனாவில் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த யி என்ற பெண் தனது காதிற்குள் விசித்திரமான சத்தம் கேட்டதாலும்,அசவுகரியமாக உணர்ந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அந்த பெண்ணின் காதிற்குள் உயிருடன் சிலந்தி ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காதிற்குள் ஒரு கேமராவை வைத்து பார்த்த போது, அந்த சிலந்தி லென்ஸை நோக்கி வந்துள்ளது. மேலும், அதன் அளவு மிகவும் பெரியதாக இருந்ததாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அந்த சிலந்தியை எலெக்ட்ரிக் ஓட்டோஸ்கோப்பைப் பயன்படுத்தி வெளியே எடுத்துள்ளனர்.