பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஸ்டேட்டஸ் வைத்த ஆசிரியை பணியிடை நீக்கம்

Updated in 2021-Oct-26 02:29 AM

பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நடைபெற்று முடிந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் பணிபுரிந்து வரும் நபீசா அட்டாரி என்ற ஆசிரியை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான ஆசிரியையின் செயலுக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.