Advertisement Contact

3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் கொண்ட நோக்கியா பவர் இயர்பட்ஸ் விற்பனை துவக்கம்

விற்பனை தொடக்கம்... ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் 3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் கொண்ட நோக்கியா பவர் இயர்பட்ஸ் விற்பனை துவங்கி இருக்கிறது.

3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் கொண்டிருக்கும் நோக்கியா பவர் இயர்பட்ஸ் 150 மணி நேரத்திற்கு பேட்டரி லைஃப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. நோக்கியா பவர் இயர்பட்ஸ் மாடலில் IPX7 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா பவர் இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்: உயர் ரக ஆடியோ மற்றும் 6 எம்.எம். கிராஃபீன் டிரைவர்கள், ப்ளூடூத் 5.0 வசதி, வாய்ஸ் அசிஸ்டண்ட், டச் கண்ட்ரோல்கள், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஒவ்வொரு இயர்பட் 50 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது.

3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ், யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் வசதி, நோக்கியா பவர் இயர்பட்ஸ் சார்கோல் பிளாக் மற்றும் லைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 699 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 7,130 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.