Advertisement Contact

வித்தியாசமான அல்வா; தேங்காயில் செய்து சாப்பிட்டு பாருங்கள்!

தேங்காயில் அல்வா செய்து பார்த்து இருக்கிறீர்களா? அருமையான சுவையில் இருக்கும். அதை செய்யும் முறை.

தேவையான பொருட்கள்: முந்திரி - 10 (2 மணி நேரம் ஊறவைக்கவும்), பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்), தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்), சர்க்கரை - 1 1/2 கப், நெய் - 1/2 கப், திராட்சை - 6.

செய்முறை: தண்ணீரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறி விடுங்கள். கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள். 

பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும். சூப்பர் சுவையில் தேங்காய் அல்வா ரெடி. வித்தியாசமான ருசி மற்றும் ஆரோக்கியமானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.