ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய 2 நரிக்குட்டிகள் மீட்பு

Updated in 2021-Nov-14 10:02 AM

ஊருக்குள் நுழைந்த 2 நரிக்குட்டிகள்...சீனாவில் கொட்டும் பனியை தாங்காமல் ஊருக்குள் அழையா விருந்தாளியாக வந்து பொது மக்களை அச்சுறுத்திய 2 நரிக் குட்டிகள் பிடிபட்டன.

கொட்டும் பனியில் வழி தவறிய 2 நரிக் குட்டிகள் உணவுத் தேடி Chaoyang நகர குடியிருப்புகளுக்குள் புகுந்தன. நரிக் குட்டிகளை கண்டு மிரண்ட மக்கள் தங்களிடம் இருந்த உணவுகளை தூக்கி வீசிவிட்டு வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், 2 குட்டிகளையும் மீட்டு உயிரியல் பூங்காவில் கொண்டு விட்டனர்.