கராச்சியில் பரவி வரும் மர்மக்காய்ச்சலால் மக்கள் பீதி

Updated in 2021-Nov-14 10:19 AM

மர்மக்காய்ச்சலால் மக்கள் பீதி...பாகிஸ்தானின் கராச்சி நகரில் பரவிவரும் டெங்கு போன்ற மர்மக் காய்ச்சல், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பரவிவரும் டெங்கு போன்ற மர்மக் காய்ச்சல், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டெங்குக்கு உள்ளானவர்களைப் போல ரத்தத்தில் வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் குறைகின்றன.

பிற அறிகுறிகளும் டெங்கு காய்ச்சலைப் போலவே இருக்கின்றன. ஆனால் டெங்கு காய்ச்சலா என்று பரிசோதித்தால், ‘நெகட்டிவ்’ என்று வருகிறது. இந்த மர்ம காய்ச்சலுக்கு காரணம், டெங்கு போன்ற வியாதிகளை ஏற்படுத்தும் வைரஸ்களின் குடும்பமான ‘ஆர்போவைரசஸை’ சேர்ந்த மற்றொரு வைரசாக இருக்கலாம் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மர்மக் காய்ச்சலால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது போன்ற சிகிச்சையை ஆஸ்பத்திரிகள் வழங்கி வருகின்றன.