பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ராணுவம் புரட்சியில் இறங்கலாம் என்று தகவல்

Updated in 2021-Nov-18 06:39 AM

ராணுவம் புரட்சியில் இறங்கலாம் என தகவல்... பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ராணுவம் புரட்சியில் இறங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை மீண்டும் பதவியில் அமர்த்தவும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் வெளிநாட்டில் உள்ள நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக இம்ரான் கானுக்கும் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும்  மோதல் வெடித்தது. அண்மைக்காலமாக இது மேலும் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது.