விண்வெளி நிலையத்தில் சீன வீரர்களின் பொழுது போக்கு

Updated in 2021-Nov-19 05:57 AM

விண்வெளி நிலையத்தில் புதிர் விளையாட்டு...விண்வெளி நிலையத்தில் சீன வீரர்கள், தங்கள் நாட்டின் பாரம்பரிய "லாட்ஸ்கி" என்னும் புதிர் விளையாட்டை விளையாடும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி, இவர்கள் சீனாவின் கோபி பாலைவனப் பகுதியில் இருந்து, விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை, விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ள உள்ள இவர்கள், தங்கள் பொழுதுபோக்கு நேரத்தில், இந்த புதிர் விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்கா, ரஷ்யாவை போன்று சீனாவும் தனியே விண்வெளி நிலையம் அமைத்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.