ரவுடி கும்பல்கள் இடையே நடந்த மோதல் சம்பவம்

Updated in 2021-Nov-19 05:58 AM

பாலத்தில் தொங்க விடப்பட்ட உடல்கள்...மெக்சிகோவில் ரவுடி கும்பல்கள் இடையே நடந்த மோதல் எனக் கருதப்படும் சம்பவத்தை தொடர்ந்து 9 பேரின் உடல்கள் பாலத்தின் மீது இருந்து தொங்கவிடப்பட்டுள்ளது.

மெக்சிகோவின் சகடெக்காஸ் மாநிலத்தின் குயுவாடெமோக் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது. மெக்சிகோவில் சமீப காலங்களாக ரவுடி கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், கேன்கன் பகுதியில் நிரந்தரமாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளதாக அதிபர் ஓப்ரடார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை ரவுடி கும்பல்கள் இடையேயான மோதல் சம்பவங்களில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 2 ஆயிரத்து 400 பேர் என மொத்தம் சுமார் 21 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.