மத்திய தரைக்கடலில் அகதிகளுக்கு நேர்ந்த சோகம்

Updated in 2021-Nov-21 08:02 AM

அகதிகளுக்கு நேர்ந்த சோகம்...லிபியா அருகே மத்திய தரைக் கடலில் அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 75 போ உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் அடைக்கலம் தேடி சென்று கொண்டிருந்த அந்த அகதிகளில் 15 பேரை மட்டும் மீனவா்கள் மீட்டு லிபியா அழைத்துச் சென்றனா். கடந்த வாரம் நேரிட்ட இந்த விபத்து குறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்பு சனிக்கிழமை தகவல் தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 420 அகதிகளை இத்தாலிய கடலோரக் காவல் படை சனிக்கிழமை மீட்டது. அவா்களில் 70 பேர் இத்தாலிக்குச் சொந்தமான லாம்பெடுசா தீவுக்கு அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.