ஆக்சி மீட்டர்கள் குறித்து பிரிட்டன் விடுத்த வலியுறுத்தல்

Updated in 2021-Nov-21 08:03 AM

பிரிட்டனின் கோரிக்கை...நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் காட்டும் ஆக்சிமீட்டா்கள் போன்ற கருவிகள், வெள்ளை இனத்தவா்களை விட கருப்பினத்தவா்கள் உடலில் துல்லியம் குறைவாக செயல்படுவதால், அவா்கள் அதிகம் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராய வேண்டும் என்று சா்வதேச நாடுகளை பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சாஜித் ஜாவித் கூறுகையில், பெரும்பாலும் வெள்ளை இனத்தவா்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் மருத்துவக் கருவிகள் வடிவமைக்கப்படுவதால் இத்தகைய பாகுபாடு நிலவுவதாகத் தெரிவித்தாா்.

மேலும், ஆக்சிமீட்டா்களின் துல்லியமின்மையால் கொரோனா பலி அதிகரித்திருக்கலாம் என்று அவா் கூறினாா்.