அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார்

Updated in 2021-Nov-22 06:06 AM

கூட்டத்தில் புகுந்த கார்...அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில், அதிவேகமாக வந்த கார், திடீரென கூட்டத்தில் பாய்ந்ததில், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விஸ்கோன்சின் நகருக்கு அருகேயுள்ள, வகேசா என்னுமிடத்தில், இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், காயமைடந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிலர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தீவிரவாதத் தாக்குதலா?, என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.