தடாலடியாக சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கொள்ளையடித்த கும்பல்

Updated in 2021-Nov-22 06:08 AM

கும்பலாக சென்று கொள்ளை...அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் தடாலடியாக புகுந்து கைகளில் கிடைத்த பொருட்களை திருடிவிட்டு கார்களில் தப்பிய 80 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் கண்ணாடிகளை உடைத்தவாறு கடையினுள் அடாவடியாக நுழைந்த 80 பேர், கைகளில் கிடைத்த பொருட்களை அள்ளிக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கார்களில் பறந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விரட்டிச் சென்று 3 பேரை கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.