10 லட்சம் குழந்தைகள் மரணத்தின் தருவாயில் உள்ளன

Updated in 2021-Nov-22 06:09 AM

ஊட்டச்சத்து குறைபாடு...ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மரணத்தின் தருவாயில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் பட்டினியாக இருப்பதாகவும், 30 லட்சம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாகவும், அதில் 10 லட்சம் குழந்தைகள் இறக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆப்கானிய குழந்தைகள் அபாயகரமான வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.