செல்பி எடுக்க நினைத்தார்... கடி வாங்கியதால் படுகாயமடைந்தார் 

Updated in 2021-Nov-25 06:36 AM

செல்பி எடுக்க நினைத்தவருக்கு ஏற்பட்ட கதி...பிலிப்பைன்ஸ் நாட்டில் பொம்மை முதலை என நினைத்து செல்பி எடுக்க குழியில் இறங்கியரை நிஜமான முதலை தாக்கியதில் படுகாயமடைந்தார்.

நெஹிமியாஸ் சிப்பாடா என்பவர் தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ககாயன் என்ற இடத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றார்.

அங்கு 12 அடி நீளத்திற்கு இருந்த முதலையைக் கண்ட அவர், அது பொம்மை என நினைத்து அது இருந்த குழிக்குள் இறங்கி செல்பி எடுக்க முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த முதலை நெஹிமியாசின் கையைக் கடித்துப் பிடித்துக் கொண்டது.

அப்போதுதான் உண்மையான முதலையிடம் சிக்கிக் கொண்ட விஷயம் அவருக்குத் தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும், சில விநாடிகள் ஆடாமல் அவர் அமைதியாக இருந்த அவர், முதலை அசந்த நேரத்தில்  திடீரென தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.