தர மாட்டேன்... ரூ.24 கோடி கொடுத்தாலும் மாட்டை தர மாட்டேன்

Updated in 2021-Nov-25 06:42 AM

ரூ.24 கோடிக்கும் கேட்டு கொடுக்கலையே...ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் ஜாங்கிட். இவர், பீம் என்ற உயர் ரக எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். 1500 கிலோ எடை கொண்ட அந்த எருமை மாட்டை பராமரிப்பற்கு மட்டும் மாதம் 2 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார் அர்விந்த் ஜாங்கிட்.
 
பீம் எருமையின் விந்து 0.25 மில்லி 500 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், வருடத்திற்கு 2500 மில்லி விந்துவை விற்று 50 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார் அர்விந்த் ஜாங்கிட். இந்த விந்து மூலம் பிறக்கும் எருமைகள் 40 முதல் 50 கிலோ வரை எடை இருக்கும்.

அத்துடன் அந்த எருமைகள் வளர்ந்து நாளொன்றுக்கு 20 முதல் 30 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளது. அதனால் தான் பீம் எருமை மாட்டுக்கு நிறைய கிராக்கி உள்ளது. மேலும், ரூ.24 கோடி விலைக்கு கேட்டும், அதை விற்க அரவிந்த் ஜாங்கிட் மறுத்து விட்டார்.