சிற்றோடையின் நீர் உந்து சக்தியால் மேலெழுந்த உறைகிணறு

Updated in 2021-Nov-26 05:44 AM

உந்து சக்தியால் மேலெழுந்த கிணறு... தண்ணீரில் உந்துசக்தி காரணமாக 25 அடியில் இருந்து உறைகிணறு மேலெழுந்த காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனமழை காரணமாக திருப்பதியில் தற்போதும் சாலைகளில் தண்ணீர் ஓடுகிறது. இந்தநிலையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா நகர் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 25 அடி ஆழமுள்ள உறைகிணறு திடீரென்று மேலெழுந்த அதிசய சம்பவம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு சென்று ஆச்சரியத்துடன் கீழிருந்து மேல் எழுந்து நின்ற உறை கிணற்றை பார்வையிட்டனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி அங்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சிற்றோடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதன்மீது தற்போது வீடுகள் கட்டபட்டுள்ள நிலையில் தற்போதும் அந்த சிற்றோடை உயிரோட்டத்துடன் உள்ளது.
 
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பூமிக்கு அடியில் புதையுண்டிருக்கும் சிற்றோடையில் நீரோட்டம் ஏற்பட்டு நீரின் உந்து சக்தி காரணமாக உறைகிணறு மேலெழும்பி உள்ளது என்று கூறினார்.