எங்களை தடுத்து விடுவோம்னு நம்பிக்கையோடு இருக்காங்க

Updated in 2021-Nov-29 06:48 AM

பரபரப்பான கட்டம்... இந்தியர்களின் பார்வையில், எங்களை இலக்கை அடையவிடாமல் தடுத்து நிறுத்திவிடுவோம் என்று முழு நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர் என்று நியூசிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 49 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 234 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதனால், 284 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அஸ்வின் வீசிய பந்தில் முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய தொடக்க வீரர் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்களை எடுத்திருந்தது.

நியூசிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி அளித்துள்ள பேட்டியில், ' மூன்று முடிவுகளும் சாதகமாகவே வந்ததாக நான் கருதுகிறேன். இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பிறகு நாங்கள் கண்டிப்பாக இலக்கை அடைந்துவிடுவோம். இந்தியர்களின் பார்வையில், எங்களை இலக்கை அடையவிடாமல் தடுத்து நிறுத்திவிடுவோம் என்று முழு நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர். வில்யங் ஆட்டமிழந்தது பற்றி அவரிடம் நான் பேசவில்லை. ஆனால், அவர் ஆட்டமிழந்தது எனக்கு மிகுந்த அதிருப்தியாக இருந்தது. ' இவ்வாறு அவர் கூறினார்.

கான்பூர் டெஸ்டின் கடைசி நாளான இன்று இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. நியூசிலாந்தின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணியில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில்லே, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றிநிகோலஸ் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியில் நியூசிலாந்தின் பேட்டிங்கிற்கு குடைச்சல் கொடுக்க அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் சுழலில் காத்துள்ளனர். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சில் குடைச்சல் கொடுக்க காத்துள்ளனர்.