அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்

Updated in 2021-Dec-02 12:57 PM

துப்பாக்கிச்சூடு...அமெரிக்காவில் சமீப காலமாக அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகின்றன. பொலிஸாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் நாட்டில் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேவேளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்று கொண்டுதான் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் Michigan மாகாணத்தில் உள்ள பாடசாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.