புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டது இலங்கை

Updated in 2021-Dec-02 12:58 PM

புதிய சுகாதார வழிகாட்டல்கள்...எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை  குறித்த வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய புதிய வழிகாட்டல்களுக்கு அமைய, திருமண மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே திருமண நிகழ்வுகளில் பங்கேற்க முடியும். அத்துடன் அவர்களுள் 200 பேர் அளவிலானவர்களே கலந்து கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் திறந்தவெளி திருமண நிகழ்வுகளில் 250 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அற்ற மரண சடங்குகள் 24 மணி நேரத்தில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதுடன் அந்த சடங்குகளில் 20 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.