கேரளாவுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த முதல்வர்

Updated in 2021-Dec-02 01:07 AM

கொரோனா கட்டுப்பாடுகள் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது

அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு முடிவடையும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது மற்றும் தடுப்பூசியை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிந்து, கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்