எந்த தடையும் ஏற்படாது... பண்டிகையை கொண்டாடலாம்

Updated in 2021-Dec-02 01:15 AM

எந்த தடையும் ஏற்படாது...தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணத்தால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தடை எதுவும் ஏற்படாது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓமிக்ரான் பரவல் காரணத்தால் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களில் தடை எதுவும் இருக்காது என்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி அடுத்த வருடத்தின் முதல் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேலான அனைத்து பொதுமக்களும் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை செலுத்தி கொள்ளுமாறும் இங்கிலாந்து பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.