நம்ம செஃப் தாமுவா இது? வியக்கும் ரசிகர்கள்

Updated in 2021-Dec-03 09:09 AM

செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும், நம்ம செஃப் தாமுவா இது என்று வியந்து போய் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

சின்னத்திரையின் கலகலப்பான சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருபவர், சமையல் கலை வல்லுநர் செஃப் தாமு.

இந்நிலையில் செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும், நம்ம செஃப் தாமுவா இது, என கேட்டு வருகிறார்கள்.