இது லேட்டஸ்ட் மட்டுமல்ல... செம காஸ்ட்லியும் கூட!!!

Updated in 2021-Dec-10 06:13 AM

என்ன ஒரு யோசனை...வியட்நாமில் உள்ள உணவகம் ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் விலை நபர் ஒருவருக்கு, வியட்நாமீஸ் டாங் மதிப்பின் படி 1003108 ₫ ஆகும். வியட்நாம் - ஹனோய் நகரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த உணவகம் திறக்கப்பட்டது.

தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே அடுப்பில் வைத்து சமைப்பதை, வாடிக்கையாளர்கள் நேரில் காணவும் அதனை படம்பிடிக்கவும் அந்த உணவகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த தங்க இறைச்சின் விலை மட்டுமல்ல, சுவையும் நன்றாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.