முகப்பருக்களை போக்க எளிய இயற்கை குறிப்புகள்

Updated in 2021-Dec-10 06:29 AM

முகத்தில் ஏற்படும் முகப்பரு, கருவளையம் ஆகியவை மறைந்து முகம் பொலிவு பெற சில எளிய இயற்கை குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
 
முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலை பருப்பு பாசி பயறு கால் கிலோ,ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம், கால் கிலோ மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் முகம் அழகு பெறும்.

தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.  முகப்பரு தழும்பு மாற எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், புதினா சாறு 2 ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் முகப்பரு தழும்பு மாறும்.

கடலை மாவுடன் உருளைகிழங்கு சாறு சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவு பெறும்.  3 கேரட் துண்டு, 3 ஆப்பிள் துண்டு இவற்றை ஜூஸ் செய்து, இந்த ஜூஸ்சில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் பளபளக்கும்.