அனுபவம் வாய்ந்த மூத்த பந்துவீச்சாளர் ஓய்வு அறிவிப்பை வெளியிட உள்ளார்?

Updated in 2021-Dec-12 07:04 AM

ஓய்வை அறிவிப்பாரா?...இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு தனது ஓய்வு அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

கடந்த கால மோசமான வரலாறுகளை மாற்றி இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருப்பதை போன்று, முன்னாள் வீரர்கள் பலரும் இந்த தொடர் குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இரு அணிகள் இடையேயான இந்த தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளையும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் ரசிகர்கள் வருத்தப்பட கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சவுத் ஆப்ரிக்கா அணிக்கெதிரான இந்த தொடரோடு இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அசத்தியுள்ளார். வயது முதிர்வு காரணமாகவும் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இஷாந்த் சர்மா கடந்த 12 மாதங்களில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் 14 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்தியுள்ளார்.

மேலும் இளம் வீரர்களின் வருகையால் இஷாந்த் ஷர்மாவுக்கு இந்திய அணியில் அடிக்கடி வாய்ப்பு கிடைப்பதும் இல்லை இதன் காரணமாக இந்த தொடரோடு இஷாந்த் ஷர்மா ஓய்வு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது