இதுதான் காரணம்... மாப்பிள்ளை போட்ட அதிரடியில் வாயடைத்து போன மணமகள்

Updated in 2021-Dec-12 07:05 AM

வாயடைத்து போன மணப்பெண்...திருமண மண்டபத்தில் மணப்பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவரே அசந்து போகும் அளவுக்கு மணமகன் பதில் அளித்துள்ள நிலையில் ஆண்கள் எல்லாம் காலரை தூக்கிவிட்டு சபாஷ் போட்டு வருகிறார்கள்.

அண்மைக்காலமாக கல்யாண வீடுகளில் பல்வேறு காமெடி களேபரங்கள் நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். ஒரு திருமணத்தில் கண்ணாடி அணிந்திருந்த மணமகனிடம் சில எழுத்துகளை படிக்கச் சொன்ன போதுதான் அந்த நபருக்கு கண் பார்வை சற்று மங்கலாக தெரியும் என்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்து அந்த திருமணம் நின்று போனது.

அதேபோல் ஒரு திருமணத்தில் மாப்பிள்ளையின் தாய்மாமா குட்கா போட்டுக் கொண்டு சம்பிரதாயங்களை செய்தார். அப்போது அந்த மணப்பெண் பளார் என அறைந்து குட்காவை துப்பி வருமாறு கூறினார். ஆனால் அந்த தாய்மாமாவோ "நான் மட்டுமா குட்கா போட்டேன், மாப்பிள்ளை வாயை பாருங்கள்" என போட்டுக் கொடுத்துவிட்டார்.

உடனே மணமகளின் பார்வை மாப்பிள்ளையின் மீது திரும்பியது. அந்த பெண் வாயை காட்டுமாறு கூற, மாப்பிள்ளை தனது தாய்மாமாவுக்கு அடித்த அடியை பார்த்துவிட்டு ஒன்றுமில்லை என பதில் சொல்ல ஓங்கி ஒரு அறைவிட்டதில் அவரும் போய் குட்காவை துப்பிவிட்டு வந்தார்.

ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பின் போது இரவு குடித்துவிட்டு போதை தலைக்கேறி காலை முகூர்த்த நேரத்தில் வரவில்லை. இதையடுத்து மணமகன் அறைக்கு போய் சென்று பார்த்தால் அவர் போதையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் தனக்கு இந்த குடிகார மாப்பிள்ளை வேண்டாம் என கூறிய அந்த பெண் திருமணத்தையே நிறுத்திவிட்டார்.

அந்த வகையில் மணப்பெண் ஒருவர் மணமகனிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என கேட்டார். அதற்கு மணமகன் யோசித்து மணப்பெண்ணே மிரளும் அளவுக்கு ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். ந்த மணமகன் "நான் நிம்மதியாக இருக்க விரும்பவில்லை. அதனால் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று ஒரே போடு போட்டார். மணப்பெண் கப்சிப் ஆகிவிட்டார். அங்கு சுற்றியிருந்தவர்களும் சிரித்தனர்.