பரவுது... பரவுது... முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

Updated in 2021-Dec-13 12:38 PM

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்...அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக மக்களை அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாக செயல்பட்டு வருவதால் உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கே ஒரு முடிவு காலம் கிடைக்காத நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron உலக நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து நியூயார்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அப்படி இல்லையெனில் தங்களுடைய பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கவர்னர் கேத்தி ஹோச்சுல் அறிவித்துள்ளார். நியூயார்க் நகர மக்களின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.