காயம் ஏற்பட்டது... போட்டியில் இருந்து விலகினார்

Updated in 2021-Dec-13 12:59 PM

விலகினார்...அடிலெய்டு டெஸ்டில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் விலகினார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட், வரும் டிச. 16ல் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக துவங்குகிறது.

இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட், இடுப்பு பக்கவாட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் விலகினார். பிரிஸ்பேன் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 27 ஓவர் (13+14) பந்துவீசிய இவர், 3 விக்கெட் (2+1) கைப்பற்றினார்.ஹேசல்வுட்டுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் 25, களமிறங்க உள்ளார். இதுவரை 2 டெஸ்டில், 6 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.