இந்தியாவில் புதிதாக 6915 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated in 2022-Mar-02 03:54 AM

கொரோனா பாதிப்பு... இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், புதிதாக 6 ஆயிரத்து 915 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 180 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தற்போது நாடு முழுவதும் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.