இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

Updated in 2020-Feb-13

இன்று பட்ஜெட் தாக்கல்... தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடிமராமத்து பணிக்கு வரவேற்பு உள்ளதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.

அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவிக்கப்படும்.