Advertisement Contact

தமிழக பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்... தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:

உணவு மானியம் - ரூ.6,500 கோடி, பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி, உயர்கல்வித்துறை -ரூ.5,052.84 கோடி, மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி, மருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி, சுகாதாரத்துறை - ரூ.15,863 கோடி, தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி, தொல்லியல் துறை - ரூ.31.93 கோடி, போக்குவரத்து துறை- ரூ.2716.26 கோடி.

பேரிடர் மேலாண்மை -1360 கோடி, சிறைச்சாலைத்துறை- 392 கோடி, எரிசக்தி துறை - 20,115.58 கோடி, கீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி, அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி, நெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி, பயிர்க்கடன் - ரூ.11 ஆயிரம் கோடி, கால்நடை வளர்ப்பு-ரூ.199 கோடி, வேளாண்மை துறை -11,894.48 கோடி, அம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 18,540 கோடி, குடிமராமத்து திட்டத்துக்கு - ரூ.300 கோடி, காவல்துறை - ரூ.8876.57 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை - ரூ.405.68 கோடி.

பட்ஜெட்டில் இவ்வாறு துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.