சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனியே கேப்டன்

Updated in 2022-Apr-30 04:56 AM

மீண்டும் கேப்டன்... ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனியே மீண்டும் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, ஆட்டத்திறனில் கவனம் செலுத்தும் வகையில் தனது பொறுப்பை தோனியிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணியை தோனியே வழிநடத்திய நிலையில், நடப்பு தொடரில் அவர் கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

இந்நிலையில், நடப்பு தொடரில் அணி தொடர் தோல்வி கண்டு வரும் நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்கவுள்ளார்.