பனிச்சறுக்கு வீரர்களின் அட்டகாச சாகசங்கள்

Updated in 2022-May-07 02:10 AM

பனிச்சறுக்கு வீரர்கள் சாகசம்... சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் பனிச்சறுக்கு சீசன் முடிவதை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பனிச்சறுக்கு வீரர்கள் வண்ணங்களை காற்றில் தூவி சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

வலாய்ஸ் பகுதியில் உள்ள க்ரேன்ஸ் - மோண்டனா ரிசார்ட்டில் உள்ள பிரபல பனிச்சறுக்கு தளத்தில் நடைபெற்ற தி நைன்ஸ் நிகழ்ச்சியில் பனிச்சறுக்கு வீரர்கள் கலந்து கொண்டு ஆல்ப்ஸ் பனி மலையில் சறுக்கியும், பறந்தும் புதுமையான வித்தைகளை செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சி முடிவில் சிறந்த டிரிக், சிறந்த ஸ்டைல், ஒரு வாரமாக தொடர்ந்து சிறப்பாக சாகசங்கள் செய்தவர் என்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.