சீனாவின் முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு

Updated in 2022-May-10 02:25 AM

சீனாவில் சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் ஷாங்காய் நகரத்தில் மட்டும் 253 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 2020 ஆம் ஆண்டைப் போல கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதற்கு தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சீன பொருட்களின் விற்பனை உலகளவில் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் ஊரடங்கு உள்ளிட்டவை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.