கொரோனா பரவலால் அரண்மனை அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடல்

Updated in 2022-May-11 05:33 AM

அரண்மனை அருங்காட்சியகம் மூடல்... கொரோனா பரவல் காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற அரண்மனை அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தியனன்மென் சதுக்கத்தின் தெற்கே சுமார் 183 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரத்து 999 அறைகளுடன் அமைந்துள்ள இந்த அரண்மனை 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

அரண்மனை அமைந்துள்ள பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, நாளை முதல் அரண்மனை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெய்ஜிங்கில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மக்கள் வீடுகளில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.