தன் குடும்பம் மீது விராட்கோலி கொண்டுள்ள அன்பு

Updated in 2022-May-13 02:37 AM

தன் குடும்பம் மீது கொண்டுள்ள அன்பு... ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது குடும்பத்தின் மீதான அன்பை மிக தனித்துவமான முறையில் வெளிக்காட்டியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனில் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னாள் கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான விராட்கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர் திருமணமானது முதல் சரியாக விளையாடவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் அவர் மீது வீச ஆரம்பித்துள்ளனர்.
 
எனினும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மிஸ்டர் நாக்ஸ் கதாபாத்திரத்தின் டேனிஷ் சேட் விராட் கோலியை சமீபத்தில் நேர்காணல் செய்திருந்தார். அந்த நேர்காணலின் பல பகுதிகள் இணையத்தில் வைரலாகின. அந்த வரிசையில் விராட் தனது குடும்பத்தைக் குறித்துப் பகிர்ந்ததும் வைரலாகியிருக்கிறது.

நேர்காணலின் பகுதியாக விராட் கோலிக்கு ஒரு பேப்பரும் ஸ்கெட்சும் வழங்கப்பட்டது. அவரிடம் சுதந்திரம் என்றால் என்ன? என வரைந்து காட்ட கூறப்பட்டது. சற்றும் தயங்காமல் வரையத் தொடங்கிய கோலி அந்த பேப்பரில், பெரிய மலைகளின் அடிவாரத்தில் ஒரு வீடு, கொஞ்ச தூரத்தில் ஒரு ஆறு வீட்டுக்கு அருகில் அவரது மனைவி மற்றும் மகளுடன் அமர்ந்திருப்பது போல வரைந்து காட்டினார்.

மகள் வாமிகா மீதான அன்பை பலவிதங்களில் தொடர்ந்து வெளிகாட்டி வருகிறார் விராட் கோலி, மகளின் வருகைக்கு பிறகு தங்களின் வாழ்க்கை மாறிவிட்டதாக பல இடங்களில் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
இப்போது இந்த வீடியோ மூலம் ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளார் விராட்.