ரஞ்சன் ராமநயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆலோசனை  

Updated in 2022-May-15 02:18 AM

ஆலோசிக்கப்படுகிறது... சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விட அதிகமான தவறு செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது என்றும் காரியவசம் தெரிவித்தார்.