இரவு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் 20 பேர் மரணம்

Updated in 2022-Jun-27 03:57 AM

20 பேர் மர்ம மரணம்... தென் ஆப்பிரிக்காவிலுள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் 20 போ் மா்மமான முறையில் சடலமாகக் கிடந்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள கேளிக்கை விடுதியில் 20 போ் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது. தகவலறிந்ததும் அங்கிருந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அந்த 20 பேரின் உடல்களிலும் எந்த காயமும் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே, உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோனைக்குப் பிறகே தெரியவரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இரவு விடுதியில் உயிரிழந்தவா்களில் பலா் அந்த இடத்திலிருந்து வெளியேற முயன்றதற்கான அடையாளங்கள் தென்படுவதாகக் கூறப்படுகிறது.