புகையிரத சேவைகள் வழக்கம் போல் நடக்கும் என அறிவிப்பு

Updated in 2022-Jun-28 06:17 AM

புகையிரத சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் சிறிதளவு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான கட்டுப்பாட்டினால் எவ்வித தாக்கமும் ஏற்படாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல தரப்பட்ட சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையையும் புகையிரத சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.