குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது

Updated in 2022-Jun-29 12:05 PM

வெளியானது தேர்வு முடிவுகள்... குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பதிவெண்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx வெளியாகியிருக்கிறது.

கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தேர்வர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது. அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலேயே பகிரப்படும். அதுபோல, குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.