சீருடை விதிகளை பணியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தல்

Updated in 2022-Jun-29 12:17 PM

மின்வாரியம் அறிவுறுத்தல்... சீருடை விதிகளை பணியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மின்சாரவாரியத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள் சேலை, சல்வார், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியில் இருக்கும் ஆண்கள், சாதாரண பேண்ட், வேஷ்டி மற்றும் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம் என்றும், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டியிருந்தால், முழுக் கையுடன் கூடிய சிறியளவில் பட்டன் வைத்த கோட் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் கண்ணியம், ஒழுக்கத்தை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் இந்த உத்தரவைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ள மின்சார வாரியம், உத்தரவை மீறுவோர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.