சென்னையில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரம் ஆனது

Updated in 2022-Jun-29 12:17 PM

4 ஆயிரத்தை நெருங்கியது... சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பின் தீவிரம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சென்னையிலும் பாதிப்பின் வேகம் அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.