ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு பரிசு வழங்கல்

Updated in 2022-Jul-08 02:27 AM

விவசாயிக்கு பரிசு... ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

வேளாண், தோட்டக்கலை பயிர்கள் எதுவாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவராக இருக்க வேண்டும். விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூ.100. விண்ணப்பத்தை மாவட்ட கண்காணிப்பு குழு கமிட்டி பரிந்துரை செய்து மாநில கமிட்டிக்கு அனுப்பும். எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு எடையில் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, அதன் மதிப்பு உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிக்கு ஏற்றுமதியாளர் விருதும் ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படும் என விற்பனை வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த வட்டார வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.